சாதனை .....!
பண்பட்ட நிலத்தில் உழவும்,விளைச்சலும் சாதனை அல்ல, பண்படா நிலத்தை பண்படுத்தி உழவும்,விளைச்சலும் புரிவதே சாதனை..
-அழகர்ராஜா....
கடவுள்.....! கோவிலும் கடவுளும் மூடநம்பிக்கை என்றேன், ஆனாலும் என் இதய கோவிலில் நீ கடவுளானாய்.. வரம் கொடு எஞ்சாமி.....
-அழகர்ராஜா...
Tuesday, August 7, 2012
மனவலி தரும் கவலைகளை நண்பனாக்கிகொண்டால் ,
எதிரி இல்லா மனிதனாவீர்கள்....
-அழகர்ராஜா
நாம் எதை தெரிந்து வைத்திருக்கின்றோமோ இல்லையோ,
நமக்கு எது தெரியாது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கவேண்டும்,
ஏன்என்றால் நமக்கு தெரியாததன் மூலமே நாம் ஏமாற்றப்படுகிறோம்..
கடல் அலை
---------------------
அவளை தொட்டுவிட மட்டுமே எண்ணி இருந்தேன்,
அவளோ என்னை கட்டி அணைத்து விட்டாள்,
அவளுக்கு அடக்கம் என்பதே இல்லை,..
அவள் தான் "கடல் அலை ".