Sunday, September 9, 2012

பாவையின் பார்வை, பைந்தமிழோடெனில்......
செவ்விதழ் வருடல், செந்தமிழோடெனில்......


-அழகர்ராஜா....

Sunday, August 19, 2012

சாதனை .....!
பண்பட்ட நிலத்தில் உழவும்,விளைச்சலும் சாதனை அல்ல,
பண்படா நிலத்தை பண்படுத்தி உழவும்,விளைச்சலும் புரிவதே சாதனை..

-அழகர்ராஜா....
கடவுள்.....!
கோவிலும் கடவுளும் மூடநம்பிக்கை என்றேன்,
ஆனாலும் என் இதய கோவிலில் நீ கடவுளானாய்..
வரம் கொடு எஞ்சாமி.....

-அழகர்ராஜா...

Tuesday, August 7, 2012

மனவலி தரும் கவலைகளை நண்பனாக்கிகொண்டால் ,
எதிரி இல்லா மனிதனாவீர்கள்....

-அழகர்ராஜா
நாம் எதை தெரிந்து வைத்திருக்கின்றோமோ இல்லையோ,
நமக்கு எது தெரியாது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கவேண்டும்,
ஏன்என்றால் நமக்கு தெரியாததன் மூலமே நாம் ஏமாற்றப்படுகிறோம்..

-அழகர்ராஜா
விவசாயி.......

சுயநலவாதிகள் சுகித்திருக்க,
அவமானத்தை சகித்துக்கொள்ளும்,
அப்பாவி மிதவாதி ...

-அழகர்ராஜா
ஞானம்...........!
போதனைகளினால் தோன்றுவதில்லை,
வேதனைகளினால் தோன்றுவது....

-அழகர்ராஜா